கம்பன் பிறந்தது 1180 , திருவளுன்தூர் என அழைக்கப்படும் ஓர் இடத்தில் அதே சமையத்தில் அவர் இறந்ததோ 1250.அதுமட்டுமல்லாமல்,
கம்பனின்
காலத்தைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள்
உண்டு ஒட்டக்கூத்தன், சேக்கிழார் ஆகியோருக்கு அவன் சமகாலத்தவன் அல்லது
அவர்களுக்கு அடுத்த தலைமுறையினன் என்று
உறுதியாகச் சொல்லலாம். சடையப்ப வள்ளலின் பெயர்
இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்களில் உள்ள லிபியும் தியாக
மாவிநோதன் என்பவனுக்கு உரிய சோழநாடு என்று
கம்பன் சொல்லியிருப்பதும் இந்தக் கருத்தை உறுதிபடுத்துகின்றன.
தியாக மாவிநோதம் என்பது மூன்றாம் குலோத்துங்கனின்
பட்டப் பெயர்களுள் ஒன்று. சீவக சிந்தாமணியின்
எதிரொலியையும் கம்பன் காவியத்தில் பார்க்க
முடிகிறது. எனவே இது சீவக
சிந்தாமணியின் காலத்தை அடுத்தது கம்பனின்
காலம் என்று சொல்லலாம்.
இராமாயணம்
தவிர ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, மும்மணிக்கோவை(இப்போது மறைந்துவிட்டது) ஆகியவற்றை
கம்பன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மும்மணிக் கோவையை விமர்சனம் செய்த
வாணியந்தாதன், கம்பனின் கவிதையைத் தாக்கியுள்ளான். ஏரெழுபது, திருக்கை வழக்கம் இரண்டும் உழவுத்
தொழிலில் ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கும் வேளாள மரபுக்கு ஏற்றம்
தர எழுதப்பட்டவை. ஏரெழுபது ஒரு பேரவையில் படித்து
அரங்கேற்றப்பட்டது. அவ்விழாவில் சடையன்(சடையப்ப வள்ளல்)
மகன் சேதிராயன் பாம்பு கடியால் இறந்தான்.
உடனே, கம்பன் இரண்டு வெண்பாக்கள்
பாடி உயிர்ப்பித்தான் என்றும் செவிவழிச் செய்தி
உள்ளது.
இராமாயணத்தை
ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றிய போது, அங்குப் பள்ளி
கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமாளை வேண்டி ஒரு அந்தாதியும்
கம்பர் இயற்றினார். தன் பக்தர்களுள் பிரியமான
சடகோபர் மீது 100 பாடல்கள் பாடவேண்டுமென்று திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமான்,
கம்பனுக்கு கட்டளையிட்டாராம். சிற்றிலக்கியங்கள் சிறு நூல்கள் ஆகியவற்றை
நாடறிந்த பெரும் புலவர்கள் இயற்றினார்கள்
என்று சொல்லி அவற்றுக்கு பெருமை
தேடுவது இந்திய இலக்கியங்களுக்கு பொதுவான
மரபு. இந்த இரு நூல்களுள்
பொருளாழமோ இலக்கியச் சிறப்போ மருந்துக்கும் இல்லை.
எனவே அவை கம்பனின் படைப்பு
என்ற கருத்து ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல.
No comments:
Post a Comment